தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு உப்பாற்று ஓடை அருகே தங்குமிடம் - மேயர் உறுதி!

தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பயணிகளின் வசதிக்காக மாநகராட்சிக்குட்பட்ட உப்பாற்று ஓடை அருகே மாநகராட்சி சார்பில் தங்குமிடம் கட்டப்படும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு உப்பாற்று ஓடை அருகே தங்குமிடம் - மேயர் உறுதி!
திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு உப்பாற்று ஓடை அருகே தங்குமிடம் - மேயர் உறுதி!

By

Published : Jul 30, 2022, 6:39 AM IST

தூத்துக்குடிமாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்த மேயர், “தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திருக்கோயில்களுக்கு பல வளர்ச்சித் திட்டங்களை செய்து வருகிறார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வரும் திருச்செந்தூருக்கு, விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்.

தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தின் போது ஓய்வு எடுத்து செல்வதற்காக உப்பாற்று ஓடை பகுதியில், இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பூங்கா கட்டப்பட உள்ளது.

திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு உப்பாற்று ஓடை அருகே தங்குமிடம் - மேயர் உறுதி!

இதில் பக்தர்களுக்கு வசதியாக தூங்குவதற்கான இடம், கழிப்பறை, குளிப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும். இக்கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:'செம' - வியாபாரிகளுக்கு வாழை இலை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தூத்துக்குடி கலெக்டர்!

ABOUT THE AUTHOR

...view details