கரோனா பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார். ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், மீறுபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா அச்சம் இல்லாமல், அலட்சியமாக சுற்றித்திரிந்தவர்களை முகக் கவசம் அணியுமாறும் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தி வந்தனர்.
தூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சுமார் 3ஆயிரம் பேர் கைது காவல் துறையினர் பலமுறை எச்சரித்தும் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் சுற்றித்திரிந்தவர்கள் மீது, நேற்று முதல் இன்று அதிகாலை வரை 90 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2, 573 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,033 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,407 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் அறிவிப்பு