தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரை பகுதியில் உயிருடன் கடல் ஆமைகள் கடத்தப்படுவதாக மெரைன் காவல்துறையினருக்கு நேற்றிரவு (மே 24) தகவல் கிடைத்தது. இதனை மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக வனத்துறையினருக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் - வனத்துறையினர் இணைந்து தருவைகுளம் கடற்கரையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சரக்கு வாகனம் ஒன்றில் உயிருடன் பிடிக்கப்பட்ட 5 கடல் ஆமைகளை மீட்டனர். பின் இதனை அவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்.