தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் விவகாரத்தில் அதிமுக இரட்டைவேடம்: ஆதி தமிழர் பேரவை குற்றச்சாட்டு - Toothukudi

தூத்துக்குடி: நீட் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போட்டு வருகிறது என ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

Aathi Tamilaநீட் விஷயத்தில் அதிமுக இரட்டைவேடம்-ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்r peravai

By

Published : May 12, 2019, 7:59 PM IST

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் ஆகியவற்றில் ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்து வருகிறார். அதன்படி இன்று துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் திமுக வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுப்பட்டார்.

நீட் விவகாரத்தில் அதிமுக இரட்டைவேடம்: ஆதி தமிழர் பேரவை குற்றச்சாட்டு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதியமான், “தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 23ஆம் தேதிக்குப் பின் கண்டிப்பாக அது தெரியும். அதிமுக ஆட்சி எட்டு ஆண்டுகளில் எந்த நலத்திட்டமும் செய்வில்லை. புதிதாக எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை, இவர்களது திட்டம் எல்லாம் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என்பது தான். தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் இயற்றிவிட்டு இங்கு நீட் பயிற்சி மையத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள்” என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details