தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுரோட்டில் வாகனத்தை தீ வைத்துக் கொளுத்திய இளைஞர்! - இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த இளைஞர்

தூத்துக்குடி: தாமோதரநகர் பகுதியில் நடுரோட்டில் இளைஞர் ஒருவர் தனது சொந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

a youth set fire on his own bike in Thoothukudi

By

Published : Oct 5, 2019, 3:57 AM IST

தூத்துக்குடி தாமோதரநகர் அருகில் உள்ள வண்ணார் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் வேலு. இவருக்கும், இவர் மனைவிக்கும் நேற்று நண்பகல் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் மது அருந்திய வேலு, தாமோதரநகர் பீங்கான் ஆபிஸ் சந்திப்பு அருகே நடுரோட்டில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.

கொளுந்து விட்டு எரியும் இருசக்கர வாகனம்

நடுரோட்டில் இருசக்கர வாகனம் மளமளவென்று தீப்பற்றி எரிந்ததைப் பார்த்து அருகிலிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவலர்கள் எரிந்த இருசக்கர வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:இந்தியாவில் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி: ராஜீவ் மேத்தா

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details