தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்: 6 பேர் கைது - தூத்துக்குடியில் 21 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்

தூத்துக்குடியில் 21 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய மீனவர்கள் உள்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

போதைப் பொருள் பறிமுதல்
போதைப் பொருள் பறிமுதல்

By

Published : Dec 22, 2021, 7:59 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைத்து போதைப் பொருள் கும்பலை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த மூவரை காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர்.

போதைப் பொருள் பறிமுதல்

அவர்கள் அன்சார் அலி (26), மாரிமுத்து (26), இம்ரான் கான் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.

போதைப் பொருள் பறிமுதல்

குறிப்பாக அவர்கள் புழக்கத்திற்காக வைத்திருந்த 162 கிராம் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அந்தோணி முத்து (42), பிரேம் என்ற பிரேம் சிங் (38), கசாலி (27) ஆகிய மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்தும் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

6 பேர் கைது

இதுசம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், "தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்த 6 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.21 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மீனவர் அந்தோணி முத்து, கடலில் மிதந்து வந்த ஹெராயின் பார்சலை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

பிறகு அதை தனக்கு நம்பிக்கையானவர்களிடம் சிறு, சிறு பாக்கெட்டுகளில் அடைத்து புழக்கத்திற்காக கொடுத்துள்ளார்.

அதன் சர்வதேச மதிப்பைத் தெரிந்துகொண்ட அவர், தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஏஜெண்டு முருகன் என்பவர் மூலமாக தலா 1 பாக்கெட் 1 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை வழக்கில் இதுவரை 195 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க:ஓடும் பேருந்தில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details