தூத்துக்குடி:1921ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தற்போது இந்தியா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த போது பல குறைபாடுகள் உள்ளதாகவும், முறையான கணக்கு காட்டப்படவில்லை எனவும் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தினர். ஒரு நாள் முழுவதும் நடத்தப்பட்ட அந்தச் சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் முறைகேடு செய்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இந்திய தேசியப் பங்குச் சந்தைக்கு, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விளக்கத்துடன் கடிதம் அனுப்பி உள்ளது. அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது, "செபியின் (SEBI) 30ஆவது விதியின் கீழ் அறிவிப்பு (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) ஒழுங்கு முறைகள், 2015 – புதுப்பிப்பு, வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு, 285 பிஏ-வின் கீழ், வருமான வரி அதிகாரிகள் கடந்த ஜூன் 27ஆம் தேதி அன்று, வங்கி சார்பில் குறிப்பிட்ட இடைவெளியில் வங்கி தாக்கல் செய்யும் எஸ்எப்டி எனும் குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகள் அறிக்கை தொடர்பாக கள ஆய்வில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: TMB IT Raid: 4 ஆயிரத்து 410 கோடி முறைகேடு - வருமான வரித்துறை தகவல்