தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளத்தில் குளித்தபோது சகதியில் சிக்கி இரண்டு இளம்பெண்கள் பலி - Two young women died

ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் மூழ்கி இரு இளம் பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தில் குளித்தபோது சகதியில் சிக்கி பலியான சிறுமி!
குளத்தில் குளித்தபோது சகதியில் சிக்கி பலியான சிறுமி!

By

Published : Nov 7, 2022, 3:24 PM IST

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை நயினார்புரத்தைச்சேர்ந்தவர், தேவராஜ் - சண்முகத்தாய் தம்பதியினர். இவர்களுக்கு சுடலைக்கனி, வள்ளி, திவ்யதர்ஷினி என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சண்முகத்தாய் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து அவரின் 16ஆம் நாள் காரிய நிகழ்ச்சி நேற்று நயினார்புரத்தில் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் சிவகளை பெரியகுளத்தில் குளிக்கச்சென்றுள்ளனர். அவருடன் மூத்த மகள் சுடலைக்கனி மற்றும் உறவினர்கள், பெண்கள் என ஏராளமானோர் சென்றுள்ளனர்.

அதில் ஆறுமுகநேரியைச்சேர்ந்த கோகிலா என்ற 12 வயது சிறுமி திடீரென குளிக்கும்போது சகதியில் சிக்கியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக சுடலைக்கனி உள்ளே இறங்கியுள்ளார். அப்போது இருவரும் சகதியில் சிக்கியுள்ளனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்கள் நீரில் மூழ்கினர். இதற்கிடையில் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் சுடலைக்கனியை மட்டும் அங்கிருந்தவர்கள் சுயநினைவின்றி மீட்டனர்.

அதன் பின்னர் அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி கோகிலாவை இறந்த நிலையில் மீட்டனர். இதற்கிடையில் சிகிச்சைக்காக செல்லும் வழியிலேயே சுடலைக்கனி உயிரிழந்தார்.

தற்போது இருவரது உடலும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த சுடலைக்கனிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் சிவகளை நயினார்புரம் பகுதி மக்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை!

ABOUT THE AUTHOR

...view details