தூத்துக்குடி: தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டில் கால்டுவெல் காலனிக்கு செல்லும் பகுதியில், குழந்தையின் சடலம் ஒன்று கிடப்பதாக தூய்மைப் பணியாளர்கள் தென்பாகம் காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அங்கு சென்ற தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் சிலர் குறை மாசத்தில் பிறந்த பெண் குழந்தையை வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குறை பிரசவத்தில் பிறந்து 5 மாதங்களே ஆன பெண் குழந்தையின் உடலைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.