தூத்துக்குடி மாவட்டம்இனிகோ நகரில் இருந்து கடந்த 25ஆம் தேதி மாலை பைபர் படகில் தூத்துக்குடி போல்டன் புரத்தைச் சேர்ந்த கிளைட்டன், குமார், லடிஸ் ஆகியோர் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இவர்கள் புதிய துறைமுகம் கடற்கரை பகுதி அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
மீன் பிடித்துவிட்டு இரவு கரை திரும்பும் போது முயல் தீவு பகுதி அருகே கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக படகிலிருந்த கிளைட்டன் தவறி கடலில் விழுந்துள்ளார். இதையடுத்து படகிலிருந்த சக மீனவர்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கிளைட்டனை கண்டு பிடிக்க முடியாமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.