தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆ.ராசாவைக் கைது செய்' - அதிமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்! - தூத்துக்குடி அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசிய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதிமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
அதிமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Mar 28, 2021, 12:35 PM IST

தூத்துக்குடி மாவட்டம், அதிமுக மகளிர் அணி சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது தாயார் குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை ஊக்குவிக்கும் விதத்தில் நடந்து கொள்ளும் ஸ்டாலினைக் கண்டித்து, விவிடி சிக்னல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என முழக்கங்கள் எழுப்பியபடி, கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அதிமுக கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் ஊழல் தடுப்புப் பிரிவு!

ABOUT THE AUTHOR

...view details