ரூ.15 போதும்; 3 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 60 கி.மீ. பயணம்.. தூத்துக்குடி இளைஞர் கண்டுபிடித்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர்! தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர், கார்த்திக். இவர், வ.உ.சி கல்லுரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு இயற்பியல் படிப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே எலெக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட துறையில் ஆர்வம் அதிகம். இது தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை அதிகம் படித்து வருகிறார்.
இப்படி, பிடித்த படிப்பு தொடர்பாக ஒருபுறம் தேடல் இருக்கும் அதேவேளையில், இயற்பியல் தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பயோ டீசல், எலெக்ட்ரிக் வாகனம் என பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு ஒருவழியாக மின்னணு வாகனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனாலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம், மின்சார தேவை உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக இன்னும் முழுமையாக பலர் அதன் பக்கம் திரும்பாமல் உள்ளனர்.
இதையும் படிங்க:தூய்மை பணியாளர்களுக்கு 2 மாதமாக ஊதியம் வழங்கவில்லை: சங்கரன்கோவிலில் 2ம் நாள் போராட்டம்!
அப்படிப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள பேட்டரிக்கு சார்ஜ் செய்யக்கூடிய நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு அதிவேக சார்ஜர் இருந்தால் நல்லா இருக்குமல்லவா? என்ற எண்ணத்தோடு எளிய மின்சார சார்ஜரை உருவாக்கியுள்ளார், தூத்துக்குடி இளைஞர் கார்த்திக். இந்த சார்ஜரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய சிங்கிள் பீஸ் கரெண்ட் சர்வீஸ் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தும் அதிக வோல்டேஜ் உடைய மின் இணைப்புகளில் இருந்து எவ்வித பாதிப்பும் இல்லாமல் சார்ஜ் செய்யலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
அதோடு, மூன்றே நிமிடங்களில் உடனடியாக சார்ஜ் செய்யக்கூடிய வகையில் அதிவேக சார்ஜராக இருக்கும் இந்த சார்ஜர், மூன்று நிமிடங்கள் சார்ஜ் ஆவதற்கு ஒன்று முதல் மூன்று யூனிட் மின்சாரம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் என்கிறார், இதனை கண்டுபிடித்த கார்த்திக்.
சுற்றுச்சூழல் பிரச்னை மற்றும் மின்சார தேவையைக் கருத்தில் கொண்டு வெறும் 15 ரூபாய் செலவில் 60 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய, இளைஞர் கார்த்திக் கண்டுபிடித்துள்ள சார்ஜருக்கு அரசு விரைவில் அனுமதி கொடுப்பதோடு, அவரது ஆராய்ச்சிக்கு உதவ வேண்டும் என தூத்துக்குடி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியின் பத்திரப்பதிவு ரத்து