தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள் - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் மூன்று பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாட்டு வண்டி பந்தயத்தில் நடந்த விபரீதம்- வேடிக்கை பார்த்த 4 பேருக்கு காயம்!
மாட்டு வண்டி பந்தயத்தில் நடந்த விபரீதம்- வேடிக்கை பார்த்த 4 பேருக்கு காயம்!

By

Published : Jan 4, 2023, 7:19 PM IST

தூத்துக்குடி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்

தூத்துக்குடி மாவட்டம்விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, மதுரை உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தன.

வைப்பார்-தூத்துக்குடி சாலையில் பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என்று மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.

பெரிய மாட்டு வண்டியில் 10 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 10 கிலோமீட்டர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டியில், சண்முகபுரம் பகுதியைச்சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மாட்டு வண்டி முதல் பரிசையும், 2-வது பரிசை அவனியாபுரம் மோகன்சாமி குமாரும், 3-வது பரிசை சண்முகாபுரம் விஜயகுமாரின் மாட்டுவண்டியும் பரிசை தட்டிச்சென்றது.

இரண்டாவது போட்டியாக சின்னமாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. ஆறு கிலோமீட்டர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டியில், ஜக்கம்மாள்புரம் பரமசிவம் என்பவரது மாட்டுவண்டி முதல் பரிசையும்; சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த துர்காம்பிகை என்பவரது மாட்டுவண்டி 2-வது பரிசையும்; சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது மாட்டுவண்டி 3-வது பரிசையும் தட்டிச் சென்றது.

மூன்றாவது போட்டியாக பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 31 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இப்போட்டியைக் காண விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை நெடுகிலும் கைதட்டி மாட்டு வண்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

அப்போது திடீரென கூட்டத்திற்குள் உள்ளே புகுந்த மாட்டு வண்டி, அங்கிருந்த பார்வையாளர்கள் மீது மோதி நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டாகியது.

இதையும் படிங்க:எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணம்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details