தூத்துக்குடி மாவட்டத்தில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஜன-15) மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், சட்டவிரோத மதுபானம் விற்பனை நடைபெற வாய்ப்பிருந்ததால், அதை தடுத்திட தனிக்கவனம் செலுத்துமாறு காவல் துறை அலுவலர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுறுத்தியிருந்தார்.
தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை - 104 பேர் கைது! - tuticorin illegal iuquor sale
தூத்துக்குடி: மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 104 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 785 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மது
அதன்படி, மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக ஒரே நாளில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 104 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 785 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9420 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.