தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு அருகேயுள்ள புதூர் பகுதியில் வசிக்கும் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கரோனா ஊரடங்கு காரணமான இவர்களின் பெற்றோருக்கு வேலையில்லை. இதனால், சிறுவர்கள் அன்றாடம் வேலை செய்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பபட்டுள்ளனர். தற்போது பள்ளிகள் இன்னும் திறக்காத காரணத்தினால் பெற்றோர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என எண்ணிய அப்பகுதி சிறுவர்கள் காலி மதுபாட்டில்களை சேகரித்து வைத்து விற்று வருமானம் ஈட்டி வருகின்றனர்.