தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் 5 கோடி மதிப்பிலான கஞ்சா எண்ணெய் பறிமுதல்! - 5 crores worth ganja oil

தூத்துக்குடியில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா எண்ணெய்யை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்

ganja oil
கஞ்சா எண்ணெய்

By

Published : Jul 18, 2021, 12:25 AM IST

தூத்துக்குடிக்கு போதை பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான அலுவலர்கள், தூத்துக்குடி முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, வண்ணார் சாலையில் வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில் சுமார் 5 கிலோ கஞ்சா எண்ணெய் (ஹசீஷ்) கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கஞ்சா எண்ணெய்யைக் கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மனைவியைக் கொன்றவரின் தலையைக் கொண்டுவந்தால் சன்மானம் - விவசாயி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details