தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, 'தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான 637 குளங்களில் 102 முழுமையாக நிரம்பியுள்ளது' என்றார்.
மழைக்கு 47 வீடுகள் முழுமையாகச் சேதம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
தூத்துக்குடி: சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 47 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்ததாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், '50 குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. மற்ற குளங்கள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் ஆறு மற்றும் குளம் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை ஆற்றின் கரையோரங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது' எனக் கூறினார்.
மேலும், 'தற்போது பெய்த மழை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 47 வீடுகள் முழுமையாகச் சேதம் அடைந்துள்ளது. 257 வீடுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் தற்கொலைக்கு முயன்ற அரசு ஊழியர்!