தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரகுடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சோமசுந்தரம் என்பவர் வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா, ஆலங்குளத்தைச் சேர்ந்த பாண்டி, தினேஷ், பாலா ஆகிய நான்கு பேர் தங்களது வாகனத்தில் வந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து அவர்களில் இரண்டு பேர் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கியுள்ளனர். உள்ளே இறங்கிய இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். வெகு நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் வெளியே நின்றிருந்த மற்ற இருவரும் தொட்டிக்குள் இறங்கியுனர். ஆனால், அவர்களும் துருதிருஷ்டவசமாக மரணமடைந்துள்ளனர்.