தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் ஒரேநாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: மாவட்டத்தில் ஒரேநாளில் நான்கு பேரை குண்டர் சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

4 பேர்  குண்டர் சட்டத்தில் கைது
4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

By

Published : Jan 8, 2021, 5:39 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜீவா நகரைச் சேர்ந்த மணிகண்டன் (29), இந்திரா நகரைச் சேர்ந்த மாரியப்பன் (27), திட்டன்குளத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் (23), விளாத்திகுளம் மீனாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா (34) ஆகியோர் மீது கொலை முயற்சி, பாலியல் தொந்தரவு, போதைப்பொருள் கடத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து இவர்கள் நான்கு பேரையும் குண்டர் ‌சட்டத்தில் கைதுசெய்ய அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைசெய்தார்.

4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு இவர்கள் நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய ஆட்சியர் செந்தில்ராஜ் ஒப்புதல் அளித்தார்.
அதன்பேரில் மணிகண்டன் உள்பட நான்கு பேரும் அதிரடியாக கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details