தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது - thoothukudi district news

தூத்துக்குடி அதிமுக பிரமுகர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை ஏவல் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

4 arrested in AIADMK murder case
4 arrested in AIADMK murder case

By

Published : Aug 21, 2021, 8:40 AM IST

தூத்துக்குடி:ஏரல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அகரம் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் பொன்சீலன் என்ற சிங்கம் (39). பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். இவர் முத்தையாபுரம் வீரபாண்டிய நகரில் குடும்பத்துடன் வசித்துவந்தார்.

இந்நிலையில் பொன்சீலன் அகரம் பகுதியில் நடந்த கோயில் கொடைவிழாவில் கலந்துகொண்ட பின் மதிய உணவிற்காக அப்பகுதியில் உள்ள தவசிக்கனி என்பவரது வீட்டிற்குச் சென்றார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் பொன்சீலனை அரிவாளால் தாக்கி கொலைசெய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டதற்கான காரணம்

இது குறித்து, தகவலறிந்த ஏரல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பொன்சீலன் 2017 அக்டோபர் 23ஆம் தேதி அன்று முன்விரோதம் காரணமாக அகரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரின் மகனான லெனின் என்பவரைக் கொலை செய்துள்ளார்.

குற்றவாளிகள் கைது

இதற்குப் பழி தீர்க்க லெனினின் சகோதரர்களான ஜெகன் (40), ரூபன் (40), அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த ஜெபசிங் சாமுவேல் (30), ஜெபஸ்டின் (26), பெனித் நியூட்டன் (23), மாரிமுத்து (26), ரூபன் தேவபிச்சை (27) ஆகியோர் பொன்சீலனை அரிவாளால் தாக்கி கொலை செய்துவிட்டு பொன்சீலன் அணிந்திருந்த தங்க நகைகளையும் பறித்துக்கொண்டு டாடா சுமோ வாகனத்தில் தப்பிச் சென்றது தெரியவந்தது.

தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் கொலை செய்துவிட்டுத் தப்பிய ஏழு பேரில் ஜெபசிங் சாமுவேல், பெனித் நியூட்டன், மாரிமுத்து, ஜெபஸ்டின் ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட இரண்டு அரிவாள்கள், கொலை செய்துவிட்டு பறித்துச்சென்ற நகைகளில் 21 பவுன் தங்க நகைகள், டாடா சுமோ வாகனம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல்செய்தனர்.

இதில், அகரம் பகுதியைச் சேர்ந்தவர்களான பாலகிருஷ்ணன் (27), நவநீதன் (27), ரூபன் தேவபிச்சை (27) ஆகிய மூன்று பேர் திருச்செந்தூர் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தனிப்படை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க : சைக்கிள் திருட்டு - சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details