தூத்துக்குடி லூர்தம்மாள் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான குடோன் ஒன்றின் அருகே சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த மினி லாரியை இரவு ரோந்து பணிக்கு சென்ற தாளமுத்து நகர் காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 300 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இரவு நேரத்தில் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் கடல் அட்டை இருந்த வாகனத்தின் குடோன் காவலாளியை பிடித்து சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். சுமார் எட்டு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்யப்பட்டு தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.