தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஆவரங்காடு நடுத்தெருப் பகுதியில் வசிக்கும் முத்துமாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம் வீரமாணிக்கபுரம் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர்களான சபரிமணி, முருகப்பெருமாள் என்ற விக்கி ஆகிய மூன்று பேர் மீதும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குகள் நிலுவையில் இருந்தன.
கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது - Thoothukudi district Collector
தூத்துக்குடி: கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட மூன்று பேரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்நிலையில் தொடர்ந்து அவர்கள் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுவந்ததையடுத்து மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அனுமதி கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆட்சியருக்குப் பரிந்துரைசெய்தார்.
அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், குற்றவாளிகளைச் சிறையில் அடைக்க அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.