தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி பசுமை பண்ணையில் 3.5 டன் வெங்காயம் விற்பனை - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி: தூத்துக்குடி பசுமை பண்ணையில் நேற்று மட்டும் 3.5 டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

SANDHIP NANDURI
SANDHIP NANDURI

By

Published : Oct 29, 2020, 8:41 PM IST

Updated : Oct 29, 2020, 8:50 PM IST

தூத்துக்குடி வெங்காய வரத்து குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் வெங்காயம் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. வெளி சந்தையில் ஒரு கிலோ 120 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் வெங்காயத்தை தங்களது அத்தியாவசிய தேவைக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் வெங்காய பதுக்கலை தடுக்க வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை அங்காடி மூலமாக ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடியில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

பசுமை பண்ணையை ஆய்வு செய்த ஆட்சியர்

அதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என உறுதியளித்தார். அதனடிப்படையில், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் பண்ணைப் பசுமை காய்கறி அங்காடிகளில் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இந்நிலையில், பண்ணை பசுமை காய்கறி கடைகளை ஆய்வு செய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் 10 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த விலையின்படி பண்ணை பசுமை காய்கறி அங்காடியில் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியில் 9 இடங்களில் பண்ணை பசுமை மினி சூப்பர் மார்க்கெட்களில் வெங்காய விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை

நேற்று (அக்.28) ஒரே நாளில் மட்டும் 3ஆயிரத்து 500 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை ஆயிரம் கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:'40 வருஷமா இருக்கோம், எதுவும் மாறலை' - கழிவு நீரால் பாதிக்கப்படும் சாலையோர மக்கள்!

Last Updated : Oct 29, 2020, 8:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details