தூத்துக்குடி:கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில்-திருநெல்வேலி வழியாக சென்னைக்கு 40 மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று நேற்று (ஜூன்14) நள்ளிரவு 12 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. கயத்தாறு அடுத்த அரசங்குளம் அருகே சென்ற போது, தேசிய நெடுஞ்சாலையிலிருந்த சிறிய பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20-க்கும் மேலானோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.