தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (மே.17) மதுவிலக்கு சம்பந்தமாக காவல் துறையினர் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டதில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சுமார் 340 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, முத்தையாபுரம், முறப்பநாடு, கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு, கழுகுமலை, கயத்தாறு, நாலாட்டின்புதூர், விளாத்திகுளம், குளத்தூர், எட்டையபுரம், சாத்தான்குளம் மெஞ்ஞானபுரம், நாசரேத், தட்டார்மடம், தூத்துக்குடி மதுவிலக்குப் பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்குப் பிரிவு ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்டப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 24 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.