தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

21 அரிவாள் மீது 68 முறை‌‌ நடந்து அருள்வாக்கு கூறிய பூசாரி

தூத்துக்குடி: ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, அக்கோயில் பூசாரி சின்ன கருப்பசாமி 21அரிவாள் மீது 68 முறை‌‌ குழந்தைகளை கையில் ‌வைத்துக் கொண்டு ஏறி, நடந்தவாறு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

குழந்தையுடன் அரிவாள் மீது நிற்க்கும் பூசாரி சின்ன கருப்பசாமி
குழந்தையுடன் அரிவாள் மீது நிற்க்கும் பூசாரி சின்ன கருப்பசாமி

By

Published : Feb 25, 2020, 9:05 AM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல், ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயில் மாசித் திருவிழா மிகவும் புகழ்பெற்ற விழாவாகும். இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இக்கோயில் தலைமை பூசாரி சின்ன கருப்பசாமி 21 அரிவாள்கள் மீது நடந்தும், படுத்துக் கொண்டும் பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார்.

மேலும், உலக மக்கள் நன்மை பெறவும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தும் விதமாக பூசாரி சின்ன கருப்பசாமி குழந்தைகளை கையில் பிடித்தவாறு 21 அரிவாள்கள் மீது 68 முறை நடந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார்.

ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோயில் அருள்வாக்கு கூறிய பூசாரி

இதையடுத்து கோயில் பூசாரிகள் காமராஜ் , முருகேசன் ஆகியோருக்கு 68 கிலோ மிளகாய் வத்தல் அபிஷேகம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நெல்லை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்:குளு குளு வசதிகளோடு வன உயிரினங்களை அரவணைக்கும் உயிரியல் பூங்கா!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details