ஒட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மனைவி கருப்பாயி அம்மாள்(35). அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்சாமி மனைவி சரஸ்வதி(60) ஆகிய இருவரும் நேற்று விவசாய பணிக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு! - 2 women killed by lightning
துாத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கியதில் பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.
மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த கருப்பாயி அம்மாளுக்கு 4 பிள்ளைகளும், சரஸ்வதிக்கு 7 பிள்ளைகளும் உள்ளனர்.
இதையும் படிங்க:பனைத்தொழிலின் மகத்துவத்தை அடுத்த தலைமுறை அறியுமா?