தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூட்டிய வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை - கொள்ளை

தூத்துக்குடி: பூட்டியிருந்த வீட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

Thoothukudi

By

Published : Mar 28, 2019, 3:20 PM IST

தூத்துக்குடி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சையது கவுஸ் அபுபக்கர்.துறைமுகத்தில் ஊழியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்குசுறையா பேகம் என்கிற மனைவி இருக்கிறார்.

இந்நிலையில், இவர்கள் மார்ச் 18ஆம் தேதி சென்னையில் உள்ள தன்னுடைய மகள் வீட்டுக்குச் சென்றுள்ளனர். பின் மீண்டும் இன்று காலை தூத்துக்குடிக்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் பின் பக்க கதவு, படுக்கையறை கதவு ஆகியவை உடைக்கப்பட்டிருந்து. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சையது, உள்ளே சென்று பார்க்கையில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, மோட்டார் சைக்கிள் வாகன பதிவு சான்று, வங்கி பாதுகாப்பு பெட்டக சாவி, கார் சாவி உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் குழுவினர் வந்து சோதனை மேற்கொண்டனர்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thoothukudi

ABOUT THE AUTHOR

...view details