தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் 2 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது! - Thoothukudi thuggery law

தூத்துக்குடி: மாவட்டத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட இரண்டு பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது
கைது

By

Published : Oct 3, 2020, 2:27 AM IST

தூத்துக்குடி மேலசண்முகபுரம் 3ஆவது தெருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜான்சன் (50) உள்பட 3 பேரை தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினர் கடந்த மாதம் 5ஆம் தேதி கைதுசெய்தனர்.

இதில் ஜான்சனை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வல்லநாடு நாராயணசாமி தெருவைச் சேர்ந்த தம்பதியை அரிவாளால் தாக்கி கொலைசெய்ய முயன்ற சம்பவத்தில் வடக்கு வல்லநாட்டைச் சேர்ந்த தம்பான் (21) என்பவரை முறப்பநாடு காவல் துறையினர் கடந்த 15ஆம் தேதி கைதுசெய்தனர்.

இதில், தம்பானையும் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இவ்விரு சம்பவத்திலும் கைதுசெய்யப்பட்ட ஜான்சன், தம்பான் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க ஒப்புதல் கேட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைசெய்தார்.

இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஒப்புதல் அளித்ததன்பேரில் ஜான்சன், தம்பான் ஆகியோரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details