தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் அருகே வெறிநாய்கள் கடித்து 18 ஆடுகள் பலி! - rapid dogs problem

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வெறி நாய்கள் கடித்ததில் 18 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

Etv Bharatசாத்தான்குளம் அருகே வெறிநாய்கள் கடித்து 18 ஆடுகள் பலி.
Etv Bharatசாத்தான்குளம் அருகே வெறிநாய்கள் கடித்து 18 ஆடுகள் பலி.

By

Published : Dec 13, 2022, 12:54 PM IST

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் ஆடுகளை மேய்ப்பதற்காக ஊரின் வெளிப்பகுதியில் கொட்டகை அமைக்கப்பட்டு ஆடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆடு மேய்ப்பவர்களும் அருகே குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (டிச.12)மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை மாலை ஆட்டின் உரிமையாளர் செட்டில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்

இதனையடுத்து இன்று(டிச.13) காலை வந்து பார்த்தபோது அதில் 18 ஆடு வெறிநாய்கள் கடித்து இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்டின் உரிமையாளர் ஆடுகளை கடித்த வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அப்பகுதியில் பல வெறிநாய்கள் சுற்றித் திரிவதாகவும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:மனைவி, 4 குழந்தைகளை கொடூரமாக கொன்ற கணவர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details