தூத்துக்குடி: தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே பொது மேலாளர் சரத் ஸ்ரீவத்ஷா தலைமையிலான ரயில்வே அதிகாரிகள், ரயில் நிலையத்தில் பசுமை பூங்கா அமைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலையை அகலப்படுத்தி பார்க்கிங் வசதி செய்வது, பயணிகளுக்கான தங்கும் அறை, சுகாதார வசதிகள், தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு இன்னொரு நுழைவாயில் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் மதுரை கோட்ட பொது மேலாளர் சரத் ஸ்ரீவத்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், “அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ரயில் நிலையத்தை நவீனமயமாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் முடிவடைய வாய்ப்புள்ளது. மதுரை கோட்டத்தில் உள்ள தூத்துக்குடி உள்ளிட்ட 17 ரயில் நிலையங்கள், மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட உள்ளது.