தூத்துக்குடி - முத்தையாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
160 கிலோ புகையிலை பறிமுதல்; கஞ்சா விற்றதாக ஒருவர் கைது - கஞ்சா விற்றதாக ஒருவர் கைது
தூத்துக்குடி: தடைசெய்யப்பட்ட 160 கிலோ புகையிலையை காவல் துறையினர் பறிமுதல் செய்த நிலையில், கஞ்சா விற்றதாக ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
அதில், அப்பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான கடையில் நடத்தப்பட்ட ஆய்வில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 160 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, ராமகிருஷ்ணனை முத்தையாபுரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவமாக தூத்துக்குடி வடபாகம் காவல் சரகப்பகுதியில் கஞ்சா விற்றதாக ஹரி பாலகிருஷ்ணன் (39) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.