தமிழ்நாடு அரசின் கரோனா ஊரடங்கு தளர்வுகள் நேற்றூ (ஜூன்.14) முதல் அமலுக்கு வந்த நிலையில் காலை 9 மணி முதல் 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தநிலையில் பல்வேறு மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.
இதைதொடர்ந்து துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 144 கடைகளும் இன்று (ஜூன்.14) திறக்கப்பட்டு மது விற்பனை நடைப்பெற்றது. இதில் மதுக்கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
வரிசையில் நிற்கும் மதுப்பிரியர்கள் மதுக்கடைகளில் மது வாங்க வருவோர் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக தரையில் வட்டமிட்டு அடையாளம் காட்டப்பட்டு இருந்தன. மேலும் மது வாங்க வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், மது வாங்க வருபவர்கள் கைகளை சானிடைசரால் சுத்தம் செய்த பின்னரே மது வழங்கப்பட்டது.
மேலும் கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மட்டும் திறக்கப்படவில்லை என மாவட்ட டாஸ்மாக் கிளை மேலாளர் ரவி சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நெடுங்குழைகாதர் கோயிலின் தேரோட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவு!