தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் மணல் திருட்டு வழக்கில் இந்தாண்டு 120 பேர் கைது - தூத்துக்குடியில் 78 மணல் திருட்டு வழக்கு

தூத்துக்குடி: மணல் திருட்டு வழக்குகளில் இந்த ஆண்டு 120 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் இந்த ஆண்டு 120 பேர் மணல் திருட்டு வழக்கில் கைது
தூத்துக்குடியில் இந்த ஆண்டு 120 பேர் மணல் திருட்டு வழக்கில் கைது

By

Published : Sep 3, 2020, 6:35 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் திருட்டைத் தடுப்பதற்கு காவல் துறை சார்பாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அனைத்து காவல் நிலைய காவல் துறை அலுவலர்கள், காவல் ஆய்வாளர்களுக்குத் தகுந்த அறிவுரை வழங்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தாண்டு 78 மணல் திருட்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 120 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மணல் திருடுவதற்குப் பயன்படுத்திய டிராக்டர் 24, லாரி 12, டிப்பர் 28, ஜே.சி.பி. இயந்திர வாகனங்கள் 11, மாட்டுவண்டி 8, மற்ற வாகனங்கள் 24 என மொத்தம் 107 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

"மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள். மணல் கடத்தலுக்கு காவல் துறையினர் யாராவது உடந்தையாக இருந்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

மணல் கடத்தல் குறித்து பொதுமக்களுக்குத் தகவல் தெரிந்தால் காவல் துறை அவசர தொலைபேசி எண் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ‘ஹலோ போலீஸ்” 95141 44100 என்ற எண்ணிற்கு நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப், குறுஞ்செய்தி போன்றவற்றின் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் தகவல் தருபவர்கள், தங்கள் பெயர்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. பெயர்கள் கொடுத்தாலும் அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details