தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் மேலும் 109 பேருக்கு கரோனா - ஆட்சியர் ஆய்வு - 109 new corona cases at Thoothukudi

தூத்துக்குடி : ஒரே நாளில் 109 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி ஆட்சியர் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

By

Published : Jul 7, 2020, 8:16 AM IST

தமிழ்நாட்டில், தலைநகர் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முந்தைய நாட்களை ஒப்பிடுகையில் நேற்று (ஜூலை 6) சற்றே குறைந்துள்ள நிலையில், பிற மாவட்டங்களில் கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 109 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை மொத்தம் 296 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 50 பேரும், விளாத்திகுளத்தில் 25 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திரேஸ்புரம், ராமச்சந்திரபுரம் உள்ளிட்ட பகுதியில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

அதேபோல் தூத்துக்குடி அனல் மின் நிலையப் பணியாளர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் அங்கு கரோனா பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா பாதிப்புகள் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க :தூத்துக்குடி உதவி கண்காணிப்பாளருக்கு நீலகிரியில் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details