தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடற்கரை படகில் 1 டன் விரலி மஞ்சள் பதுக்கல் - காவல் துறை தீவிர விசாரணை

தூத்துக்குடி: திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் விரலி மஞ்சளை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

turmeric smuggling
turmeric smuggling

By

Published : Jan 3, 2021, 2:43 PM IST

இலங்கையில் விரலி மஞ்சளுக்கு மிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் விரலி மஞ்சள் டன் ஒன்று ரூ.10 ஆயிரம்வரை விற்பனையாகிறது. எனவே இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் மஞ்சளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது தொடர் கதையாகிவருகிறது.

இதனைத் தடுக்க தமிழ்நாடு காவல் துறை, கடலோர காவல்படை கடற்கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தூத்துக்குடி வடபாகம் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈட்டுப்பட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் சிப்பிகுளத்தை சேர்ந்த பிச்சையா வாஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் 1 டன் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் மஞ்சள், இலங்கைக்குக் கடத்தப்பட இருந்ததா, கடத்தலில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாகத் தூத்துக்குடியை சேர்ந்த மீராசா என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details