தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செலவுக்கு பணம் தரமறுத்த பெற்றோர்: எலி மருந்து சாப்பிட்டு மகன் தற்கொலை! - Crime news

திருவாரூர்: நன்னிலம் அருகே பெற்றோர் பணம் தர மறுத்ததால் விரக்தியடைந்த மகன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

செலவுக்கு பணம் தரமறுத்த பெற்றோர்: எலி மருந்து சாப்பிட்டு மகன் தற்கொலை!
செலவுக்கு பணம் தரமறுத்த பெற்றோர்: எலி மருந்து சாப்பிட்டு மகன் தற்கொலை!

By

Published : Jun 7, 2021, 3:13 AM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பூங்காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் முத்தழகன் (22).

இவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பெற்றோரிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். அவர்கள் தற்போது பணமில்லை என கூறியதால் ஆத்திரமடைந்த முத்தழகன் எலி மருந்தை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால், ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முத்தழகன், சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஜூன் 06) உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முத்தமிழன் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details