திருவாரூர்:நன்னிலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேலும், திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் கூறிய அந்த இளைஞன் பல முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதில், சிறுமி கர்ப்பமானார். தற்போது அவர் மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். இதனால், பயத்தில் இருந்த சிறுமி பெற்றோருக்கு தெரிந்து விடும் என எண்ணி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுமி பூச்சிமருந்து சாப்பிட்டதை அறிந்த இளைஞரும் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்து சாப்பிட்டு மயங்கியுள்ளார்.
பின்னர் அவரையும் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர், நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி தற்கொலை