தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு; காப்பாற்ற சென்ற இளைஞரும் கவலைக்கிடம்! - electric shock

திருவாரூர்: மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த நிலையில், காப்பாற்ற சென்ற இளைஞரும் மின்சாரத்தல் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

youngster-admitted-in-hospital-and-old-lady-died-due-to-electric-shock
youngster-admitted-in-hospital-and-old-lady-died-due-to-electric-shock

By

Published : Nov 27, 2020, 5:02 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் ருக்மணி(65). இவருடைய கணவர் இறந்துவிட்ட நிலையில், இரு மகள்களுக்கு திருமணம் செய்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இதனால் ருக்மணி தனியாக வசித்து வந்த நிலையில், இன்று காலை ருக்மணி தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள குளியலறைக்கு சென்று உள்ளார்.

அங்கு மின் கம்பியில் கசிவு ஏற்ப்பட்டிருந்தது தெரியாமல் எதிர்பாராத விதமாக மின் வயரில் ருக்மணி கை வைக்க, அவரது உடல் மீது மின்சாரம் பாய்ந்து துடித்துக் கொண்டிருந்தார்.

ருக்மணி

இதனை பின்புறத்தின் வயல் வெளியில் நின்றுகொண்டிருந்த ருக்மணியின் எதிர்வீட்டு இளைஞர் விக்னேஷ்(24) பார்த்து, ருக்மணியை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சாரம் பாய்ந்து காயமடைந்த விக்னேஷ் ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ருக்மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நன்னிலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:லாவகமாக மிதிவண்டியைத் திருடிய நபர்; சிசிடிவி உதவியால் கைது!

ABOUT THE AUTHOR

...view details