திருவாரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய, மாநில அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும். 60 வயது முதிர்ந்த முதியோர்களுக்கு விடுபடாமல் கணக்கிட்டு உரிய உதவித் தொகை வழங்கிட வேண்டும். நூறு நாள் வேலை சம்பள பாக்கியையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.
மேலும், வேளாண் சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
திருவாரூர்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர்