தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டணி குறித்து தேர்தல் வரும் போது அறிவிக்கப்படும்: முதலமைச்சர்

திருவாரூர்: அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் வரும் போது அறிவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து தேர்தல் வரும் போது அறிவிக்கப்படும்
கூட்டணி குறித்து தேர்தல் வரும் போது அறிவிக்கப்படும்

By

Published : Aug 28, 2020, 3:53 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து இன்று (ஆகஸ்ட் 28) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறு குறு தொழில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தொழில்கள் தொடங்கக் கூடாது என வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் ஹைட்ரோகார்பன் கிணறு, இரும்பு, செம்பு, அலுமினியம், உருக்காலைகள் தோல் பதனிடுதல் போன்ற தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

கூட்டணி குறித்து தேர்தல் வரும் போது அறிவிக்கப்படும்

வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருவது அதிகரித்து இருப்பதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், "வீட்டு மனை பட்டா என்பது அத்தியாவசியம். பலரும் நகர் பகுதிகளில் அருகிலேயே வசிக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு தேவையான வீட்டுமனைகளை காடுகள் சென்று எடுக்க முடியாது. தேவையின் அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஜூலை 8ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மேட்டூர் அணையில் உபரியாக உள்ள தண்ணீரை பயன்படுத்தி மட்டுமே உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் பாதிப்பு ஏதும் விவசாயிகளுக்கு ஏற்படாது" என்றார்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து அவர் கூறுகையில், "கூட்டணி குறித்து தேர்தல் வரும் போது அறிவிக்கப்படும். அதிமுக, திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் கூட்டணி குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலைவாய்ப்புகள் இருக்கின்றன; ஆட்கள்தான் குறைவு' - முதலமைச்சர்




ABOUT THE AUTHOR

...view details