தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடியும் நிலையில் குடிநீர் தொட்டி: அச்சத்தில் மக்கள் - Villagers request for a new drinking water tank

திருவாரூர்: நன்னிலம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றி புதிய குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடிந்து விழும் நிலையில் உள்ள தொட்டி
இடிந்து விழும் நிலையில் உள்ள தொட்டி

By

Published : May 31, 2020, 6:39 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சி தோப்பு தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ஒரு குடிநீர் தொட்டி அமைத்து கொடுக்கப்பட்டது.

அதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த குடிநீர் தொட்டியானது காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிந்தும் முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனேயே இந்தப் பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து மக்கள் கூறுகையில், ”இந்த குடிநீர் தொட்டி கடந்த 30 வருடங்களுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போது முழுவதும் சேதமடைந்து தொட்டியின் உள்ளே காரைகள் பெயர்ந்து தண்ணீருக்குள் சென்றுவிடுகிறது. பறவைகள் எச்சமிட்டு செல்கின்றன. அணில் போன்ற உயினங்கள் தவறி உள்ளே விழுந்து விடுவதால் துர்நாற்றம் வீசுகின்றது” என்றனர் .

குடிநீர் தொட்டியை குறித்து பேட்டியளிப்போர்
மேலும் இதுகுறித்து குடிநீர் தொட்டி ஆபரேட்டர், இந்த குடிநீர் தொட்டியை ஆரம்பத்தில் மாதந்தோறும் தவறாமல் சுத்தம் செய்து வந்ததாகவும், தற்போது இதன் மேலே ஏறி சுத்தம் செய்வதற்கு பயமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் பலமுறை வட்டாட்சியரிடமும், ஊராட்சி மன்ற தலைவரிடமும் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க:முழு ஊதியம் வழங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details