தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவதூறு வீடியோ விவகாரம்: சாலைமறியலால் திருவாரூரில் போக்குவரத்து பாதிப்பு!

திருவாரூர்: குறிப்பிட்ட சமுதாயப் பெண்களை இழிவாகப் பேசி சமூக வலைதளத்தில் தவறாகப் பதிவிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நீடாமங்கலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அச்சமுதாய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல் போராட்டத்தால் திருவாரூரில் போக்குவரத்து பாதிப்பு

By

Published : Apr 25, 2019, 5:20 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பெண்களை இழிவாகப் பேசி சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி கிராமத்தைச் சேர்ந்த அச்சமுதாய மக்கள் 300-க்கு மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை இதுவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை. உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும், இல்லையெனில் போராட்டம் தொடரும் என எச்சரித்தனர்.

இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி, தஞ்சை, வேளாங்கண்ணி, காரைக்கால், நாகப்பட்டினம் செல்லும் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவதூறு பரப்பியவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என காவல் துறை உறுதியளித்ததையடுத்து , கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட கோவில்வெண்ணி கிராம மக்கள்

ABOUT THE AUTHOR

...view details