தமிழ்நாடு, முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சில நாட்களாகவே குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாகத்தால் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். நான்கு நாட்களுக்கு ஒருமுறை இங்கு வரும் தனியார் குடிநீர் வாகனத்தில் ஒரு குடம் தண்ணீரை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி தங்கள் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
தண்ணீரின்றி அவதிப்படும் நரிக்குறவர் இன மக்கள் - water scarcity
திருவாரூர்: குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஒரு குடம் தண்ணீரை ஐந்து ரூபாய் கொடுத்து வாங்குவதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தண்ணீரின்றி அவதிப்படும் நரிகுறவர் இன மக்கள்
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை குடிநீர் தட்டுப்பாடு இல்லை, அனால் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் குடிநீர் குழாய் வழியே தண்ணீர் இழுத்து செல்வதில் சிரமம் உள்ளதாகவும், இது விரைவில் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.