தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரின் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு - திருவாரூர்

திருவாரூரில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 1,454 வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

voting machines dispatch to all constituencies in Thiruvarur,திருவாரூரின் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
திருவாரூரின் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

By

Published : Apr 5, 2021, 5:03 PM IST

திருவாரூர்: தமிழ்நாடு முழுவதும் நாளை (ஏப்.6) நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளான திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய இடங்களுக்கு, அந்தந்த தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வாகனம் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் திருவாரூர் தொகுதியில் 388 வாக்குச்சாவடிகளுக்கும், நன்னிலம் தொகுதியிலுள்ள 373 வாக்குச்சாவடிகளுக்கும், அதேபோல் திருத்துறைப்பூண்டியில் 336 வாக்குச்சாவடிகளும், மன்னார்குடியில் 357 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1454 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேன்கள் மூலம் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

இதையும் படிங்க:திருவாரூரில் ரூ.2 கோடி பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details