தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூர் அருகில் 50 ஆண்டுகளாக கான்கிரீட் பாலம் கேட்டுப் போராடும் மக்கள் - மக்கள் போராட்டம்

நன்னிலம் அருகில் உள்ள நெடுங்குளம் கோவில்பத்து கிராம மக்கள் 50 ஆண்டுகளாக கான்கிரீட் பாலம் அமைத்துத் தரக்கோரி போராடி வருகின்றனர். தற்போது இருக்கும் மரப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் நிலையில் உள்ளதால், தற்காலிகப் பாலமாவது அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கான்கிரீட் பாலம் கேட்டு போராடும் கிராம மக்கள்கான்கிரீட் பாலம் கேட்டு போராடும் கிராம மக்கள்
கான்கிரீட் பாலம் கேட்டு போராடும் கிராம மக்கள்

By

Published : Nov 11, 2021, 8:10 PM IST

திருவாரூர்: திருவாரூரைச் சேர்ந்த நன்னிலம் அருகே உள்ள நெடுங்குளம் கோவில்பத்து கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பான பாலம் கட்டித் தருமாறு அம்மக்கள் போராடி வருகின்றனர்.

கான்கிரீட் பாலம் கேட்டுப் போராடும் கிராம மக்கள்

புகார் அளித்தும் பலனில்லை

இந்நிலையில் இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் புகார் மனு அளித்து, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனைத் தெரிவிக்கின்றனர்.

கான்கிரீட் பாலம் கேட்டுப் போராடும் கிராம மக்கள்

பாதுகாப்பு இல்லாத மரப்பாலம்

தற்போது இருக்கும் மரப்பாலமானது தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால், அதிகப்படியாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாலத்தைக் கடந்து செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

கோரிக்கை நிறைவேற்றப்படுமா என எதிர்பார்ப்பு?

கான்கிரீட் பாலம் கேட்டுப் போராடும் கிராம மக்கள்

இந்நிலையில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையானது தற்போதாவது சம்மந்தப்பட்ட அலுவலர்களால் நிறைவேற்றி வைக்கப்படுமா எனப் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பாலத்தில் விரிசல்: வடிகால் குழாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details