6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்! - தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் போராட்டம்
திருவாரூர்: பழைய ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் போது கிராம உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக காலமுறை ஊதியமாக 15,700 ரூபாய் ஊதியம் வழங்கிட வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல குறைந்தபட்ச ஊதியமாக 7,500 ரூபாயை பொங்கல் போனஸாக வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பதவி உயர்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதிய குறைபாடுகளைக் கலைந்து 100 விழுக்காடு பென்சன் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சகாயம் வந்தால் அவருக்கு சகாயம் செய்யுமா அரசியல்?