திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் விஷ்ணுபுரம் ஊராட்சியில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிக்காக அங்கு குடியிருந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அப்பகுதிக்கு அருகே உள்ள கரையான் திடல் பகுதியில் குடியேற்றப்பட்டனர்.
அடிப்படை வசதிகளின்றி 40 வருடங்களாக தவிக்கும் மக்கள்! - Vishnupuram
திருவாரூர்: விஷ்ணுபுரம் அருகே உள்ள கரையான் திடல் பகுதியில் நாற்பது வருடங்களாக மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதியுற்று வருகின்றன.

village
இதனையடுத்து அங்கு உள்ள மக்கள் தங்களுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். மேலும் இந்த அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக்கோரி சாலை மறியல் என பலகட்ட போராட்டங்களை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள நிலையில் இதுவரை எந்தவித அடிப்படை தேவையும் பூர்த்தி செய்யப்படவில்லை.
இதேபோல் தங்களுடைய கைப்பேசிகளை சார்ஜ் போடுவதற்குகூட நகர் பகுதிக்கு வந்து அதற்கான பணம் செலவிடும் அவல நிலையும் உள்ளது. வயதுக்கு வந்த பெண்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட கழிவறை வசதி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.
அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மக்கள்