தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு கொலைக்கு நீதி கேட்டு விசிக ஆர்பாட்டம்! - VCK protest seeking justice for UP rape

திருவாரூர்: உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு நீதி கேட்டு திருத்துறைப்பூண்டியில் விசிக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

VCK protest in thiruvarur seeking justice for UP rape
VCK protest in thiruvarur seeking justice for UP rape

By

Published : Oct 8, 2020, 11:14 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை சட்டபேரவை தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் யோகி ஆதித்யநாத் பதவி விலக வலியுறுத்தியும் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு, உரிமை மீட்பு பிரிவு அமைப்பாளர் பூமிநாதன், மாநில ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க...குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர்: பிரதமருக்கு பதிலளித்து யோகி ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details