தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக ஆர்ப்பாட்டம்! - VCK Party

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VCK Protest Against New Education Policy In Thiruvarur
VCK Protest Against New Education Policy In Thiruvarur

By

Published : Aug 6, 2020, 3:41 PM IST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் முன்பு விசிக சார்பாக சட்டப்பேரவை தொகுதி செயலாளர் ஆராசு பிரகாஷ் தலைமையில், மக்களவை தொகுதி செயலாளர் என்டி. இடிமுரசு முன்னிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசு பதவியேற்ற நாளிலிருந்து நாட்டு மக்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சட்டவிரோத கருப்பு சட்டங்களை இயற்றப்படுகின்றன. அதேபோல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை, இஸ்லாமியர்களுக்கு எதிரான சிஐஏ, என்ஆர்சி, என்சிஆர்சி சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

இயற்கைக்கு எதிரான ஈஐஏ (EIA 2020) என்ற புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை நிறுத்தி விட்டு பாபர் மசூதி கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details